Tamilnadu

”தோல்வி பயத்தை மூடி மறைக்க இப்படியொரு நாடகம்” - அதிமுகவை சாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு முழுவதும் இன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி அமைதியான முறையொல் நடைபெற்று வருகிறது.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது மனைவியுடன் வந்து மக்களோடு மக்களாக வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.

வாக்களித்த பிறகு வெளியே வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்கள் அனைவரும் தவறாது தங்களது ஜனநாயக கடமையை ஆற்றிட வேண்டும் எனக் கூறிய அவர், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.கவும் அதன் கூட்டணி கட்சியினரும் 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றும் என உறுதிபட தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர், தோல்வி பயத்தை மூடி மறைப்பதற்காக கோவையில் அதிமுகவினர் போராட்டம் என்ற பெயரில் நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள். ராணுவத்தை அழைக்கும் அளவுக்கு அங்கு எந்த சம்பவமும் நடந்திடவில்லை.

முந்தைய அதிமுக ஆட்சியின் போது நகைக்கடன்கள் வழங்கப்பட்டதில் பல வகைகளில் முறைகேடுகளும், அயோக்கியத்தனங்களும் நடத்தப்பட்டிருக்கிறது. அவை திமுக ஆட்சியில் தடுக்கப்பட்டு உரிய நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது எனவும் பேசியிருந்தார்.

Also Read: தோல்வி பயத்தில் தேர்தலை சீர்குலைக்க முயற்சி.. SP வேலுமணி, அதிமுக MLAக்கள் கூண்டோடு கைது: போலிஸ் அதிரடி!