Tamilnadu
தூக்கில் தொங்கிய தம்பதி... “இந்த காரணத்துக்காகவா விபரீத முடிவெடுத்தாங்க?” - சென்னையில் அதிர்ச்சி!
சென்னை மடிப்பாக்கத்தை அடுத்த கீழ்க்கட்டளை பகுதியைச் சேர்ந்தவர் நம்பிராஜன். இவரது மனைவி பாப்பா. மூத்த தம்பதிகளான இவர்களுக்குக் குழந்தை இல்லை. இதனால் இந்த தம்பதி பல ஆண்டுகளாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நம்பிராஜனின் சகோதரர் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், பல முறை முயற்சி செய்தும் நம்பிராஜன் தொலைபேசியை எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்து அவரது வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது.
பின்னர், ஜன்னல் வழியாக பார்த்தபோது இருவரும் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்ததைப் பார்த்து அவர் அதிர்ச்சியடைந்து காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளார். தகவலை அடுத்து அங்கு வந்த போலிஸார் வீட்டின் கதவை உடைத்து இருவரது உடலையும் மீட்டு உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். குழந்தை இல்லாததால் முதிய தம்பதி தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!