Tamilnadu
தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த விஜயபாஸ்கர்.. கட்சியிலிருந்து நீக்கக்கோரி அதிமுகவினர் முனுமுனுப்பு?
நாடாளுமன்ற தேர்தல் சட்டமன்ற தேர்தல் ஊரக உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட தேர்தல்களில் அ.தி.மு.க பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில், தற்போது நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.கவுடன் கூட்டணி இல்லை தனித்தே தேர்தலை சந்திக்கிறது என்று அறிவித்து இரு கட்சிகளும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேரூராட்சியில் அ.தி.மு.க பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர் கொண்டுள்ளது. குறிப்பாக கீரமங்கலம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ள நிலையில் 9 வார்டுகளில் அ.தி.மு.க இரண்டு வார்டுகளில் பா.ஜ.க ஒரு வார்டில் தமாகா வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், கீரமங்கலம் பேரூராட்சியில் அ.தி.மு.க மற்றும் அதன் கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க , த.மா.கா வேட்பாளரை ஆதரித்து அ.தி.மு.கவை சேர்ந்த முன்னாள் அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கர் கீரமங்கலம் பேருந்து நிலையம் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டிய விஜயபாஸ்கர், பா.ஜ.க சார்பில் அ.தி.மு.க கூட்டணியில் 10வது வார்டில் போட்டியிடும் சுமதி மற்றும் 11வது வார்டில் போட்டியிடும் ராஜாமணி உள்ளிட்ட இரு வேட்பாளர்களையும் ஆதரித்து கையில் தாமரை சின்னம் உள்ள துண்டு பிரச்சூரத்தை வைத்துக் கொண்டு தாமரை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
கூட்டணி இல்லாமல் தாமரை சின்னத்திற்கு வாக்கு கேட்டதால் அதிமுகவினர் அதிருப்தி கட்சி கட்டுபாட்டை மீறிய விஜயபாஸ்கரை கட்சியைவிட்டு நீக்கக்கோரி கூட்டத்தில் இருந்த அதிமுகவினர் முனுமுனுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
வெனிசுலா ஜனாதிபதி மதுரோ கைது : “ஒரு போர்க் குற்றமாகும்...” - முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
ஒன்றிய பா.ஜ.க அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது சென்சார் போர்டு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
அரசு சேவைகள் இனி மக்களின் விரல் நுனியில் : “நம்ம அரசு” whatsapp Chatbot சேவை தொடக்கம்!
-
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தமிழ்நாட்டை கட்டமைக்கும் திராவிட மாடல்: UmagineTN- துணை முதலமைச்சர் உதயநிதி
-
ரூ.13.81 கோடியை விடுவிக்க வேண்டும் : ஒன்றிய அரசின் வாரிய கூட்டத்தில் அமைச்சர் மதிவேந்தன் வலியுறுத்தல்!