Tamilnadu
‘Freefire’ விளையாட்டில் மூழ்கிய மகன்.. தாய் கண்டித்ததால் நடந்த விபரீதம் - ‘பகீர்’ சம்பவம்!
சென்னை, புழல் அருகே உள்ள கங்கையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மீனா. இவரது மகன் சுரேஷ். இவர் அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் மாணவன் சுரேஷ் வீட்டில் தினமும் செல்போனில் ப்ரீபயர் கேம் விளையாடி வந்துள்ளார். இதற்கு அவரது தாய் மீனா கண்டித்துள்ளார். ஆனால், தாயின் பேச்சைக் கேட்காமல் தொடர்ந்து கேம் விளையாடி வந்துள்ளார்.
இதனால் கோபமடைந்த மீனா மகனைக் கடுமையாக திட்டியுள்ளார். இதில், மன வருத்தமடைந்த சுரேஷ் வீட்டின் எதிரே இருந்த ஆளில்லாத வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் பள்ளி மாணவனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேம் விளையாடியதைக் கண்டித்தால் பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“41 பேர் உயிரி*ந்தபோது ‘மனசாட்சி’ இல்லாமல் ஓடிச்சென்ற நாள் இன்று!” : மதுராந்தகத்தில் உதயநிதி பேச்சு!
-
அரசாணை வெளியிடுவது.. திரும்பப் பெறுவது.. repeat! : த.வெ.க அரசுக்கு எழும் கண்டனங்கள்!
-
16 ஆண்டுகளாக வழங்கிவந்த ‘முட்டைகள்’ தவெக ஆட்சியில் நிறுத்தம்! - முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கண்டனம்!
-
சட்டம், ஒழுங்கு தகவல்கள் RTI கீழ் விலக்கு.. கடும் எதிர்ப்பு கிளம்பியதும் U-Turn அடித்த தவெக அரசு!
-
“அதிமுக MLA-களை Whole Sale-ல் வாங்கும் தவெக.. திணிக்கப்பட்ட இடைத்தேர்தல்” : தாராபுரத்தில் உதயநிதி பேச்சு!