Tamilnadu
”பளபளப்பாக இருக்கும் கள்ள நோட்டு போன்றது பாஜக” - குமரியில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி!
பாஜக கள்ள பணம் போன்றது. பளபளப்பாக இருக்கும். அது சந்தைக்கும் ஆகாது, கையில் வைத்திருந்தாலும் அது ஆபத்து.
கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அமைச்சர் மனோதங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, திமுகவின் வெற்றி மிக பிரகாசமாக உள்ளது. குமரி மாவட்டத்தில் மட்டும் 600 கோடிக்கு மேல் நீதி ஒதிக்கிடு செய்து நலத்திட்டங்கள் செய்துள்ளோம். அதே வளர்ச்சி பணிகள் தொடரும் என மக்கள் நம்புகின்றனர். அதனால் தான் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளன.
பொன் ராதாகிருஷ்ணன் நினைப்பது போன்று எப்போதும் நடக்காது. ஆனால் இந்த முறை திமுக ஆதரவு அலை வீசுகிறது எனவே குமரியில் அவர்கள் முயற்சி பலனாளிக்காது.
பாஜக கள்ள பணம் போன்றது. பளபளப்பாக இருக்கும். அது சந்தைக்கும் ஆகாது, கையில் வைத்திருந்தாலும் அது ஆபத்து. யாரும் பாஜக அதிமுகவிற்கு ஒட்டு போடமாட்டார்கள். அவர்கள் தோல்வி பயத்தில் உளறி வருகின்றனர். திமுகவின் வெற்றியை யாரும் தடுக்க முடியாது மக்கள் விழிப்புடன் உள்ளனர் என அவர் தெரிவித்தார்.
Also Read
-
4,184 காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கங்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை!
-
ஐசிசி தரவரிசைப் பட்டியல்… 5 ஆண்டுகளுக்கு பிறகு ‘நம்பர் 1’ இடத்தில் விராட் கோலி! : முழு விவரம் உள்ளே!
-
288 Iconic Projects : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டம்!
-
கம்பீரின் ஆதரவால் அணிக்குள் வந்தாரா ஆயுஷ் பதோனி? - கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கொந்தளிப்பு!
-
சென்னையில் 1980-களை நினைவுபடுத்தும் ‘VINTAGE BUS’! - மக்கள் பயன்பாட்டிற்காக 5 பேருந்துகள் அறிமுகம்!