Tamilnadu
டிப்பர் லாரியில் நேருக்கு நேர் மோதிய கார்.. காதலர் தினத்தில் திருமணம் செய்த புது மாப்பிள்ளை பரிதாப பலி!
கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஷியாம் பிரசாத். இவருக்குச் சுவாதி என்ற பெண்ணுடன் காதலர் தினத்தன்று திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் புதுமண தம்பதிகளுடன் சேர்ந்து சவுடையன், மஞ்சுளா ஆகிய நான்கு பேரும் காரில் பொள்ளாச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். பின்னர் சிட்கோ பாலம் அருகே சென்றபோது எதிரே வந்த டிப்பர் லாரி மீது கார் நேருக்கு நேராக மோதியது.
இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம்போல் முழுமையாக நொறுங்கியது. இதில் புதுமாப்பிள்ளை ஷியாம் பிரசாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் கடுகாயமடைந்த சுவாதி, சவுடையன், மஞ்சுளா ஆகிய மூன்று பேரை போலிஸார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”NEET தேர்வை ரத்து செய்ய வேண்டிய நேரம் இது.” : தி இந்து நாளிதழில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
“கீழ்வெண்மணியும் கீழ்த்தரமான விமர்சனமும்” : ச.தமிழ்ச்செல்வனுக்கு முரசொலி பதிலடி!
-
பா.ஜ.க.வின் பெயரைப் பயன்படுத்த த.வெ.க அச்சப்படுவது ஏன்? - தொடரும் கள்ள மெளனம்!
-
மாணவர்களுக்கு இருக்கும் துணிச்சல்கூட இந்த 'டம்மி' முதல்வருக்கு இல்லை என்பது வெட்கக்கேடு : திமுக ஐடி விங்!
-
தூத்துக்குடி முத்துக்களுக்கான புவிசார் குறியீடு எப்போது? : கனிமொழி MP கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில்!