Tamilnadu
“டாக்டர் குடும்பத்தினரை கட்டிப்போட்டு 280 பவுன் நகை கொள்ளை.. முகமூடி கும்பல் கைவரிசை” : நடந்தது என்ன?
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் - தாராபுரம் புறவழிச் சாலையில் வசித்து வருகிறார் மருத்துவர் சக்திவேல். இந்நிலையில், இன்று முகமூடி அணிந்த மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த சக்திவேல், மனைவி ராணி, சக்திவேலின் தந்தை சென்னியப்பன், தாய் தேவநாயகம் ஆகியோரை முகமூடி அணிந்த கும்பல் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளது.
பின்னர் அவர்கள் நான்கு பேரையும் அந்த கும்பல் கட்டிப்போடு, வீட்டின் பீரோவில் இருந்த ரூ.25 பவுன் தங்கை நகைகள் மற்றும் ரூ. 25 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்துள்ளது. பின்னர் வீட்டின் வெளியே நின்றிருந்த காரை எடுத்து கொண்டு முகமூடி கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பம் குறித்து அறிந்த போலிஸார் விசாரணை நடத்தினர். பின்னர் இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து முகமூடி கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர். முதற்கட்டமாக அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மருத்துவர் வீட்டிற்குள் புகுந்து 280 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“SIR-க்கு பிறகு தமிழ்நாட்டில் 97,37,832 வாக்காளர்கள் நீக்கம்!” : தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் தகவல்!
-
வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இடம்பெறவில்லையா? : சென்னை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!
-
சென்னையில் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! : மாவட்ட தேர்தல் ஆணையர் சொல்வது என்ன?
-
சென்னையில் மின்சாரப் பேருந்து பணிமனை: துணை முதலமைச்சர் தொடங்கி வைத்த மின்சார பேருந்துகளின் சிறப்புகள்!
-
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்க்க தடை விதித்த சென்னை மாநகராட்சி : காரணம் என்ன?