Tamilnadu
”குடல் வற்றி செத்துப்போன கொக்கின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு”: அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம்!
ராமநாதபுரம் நகராட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன் ஆகியோர் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
இந்த பிரச்சாரங்களில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசும்போது, "ஒரே நாடு, ஒரே தேர்தல் என நாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழ்நாட்டிற்கும் தேர்தல் வரும் என பூச்சாண்டி காட்டுகிறார் எடப்பாடி பழனிசாமி.
மேற்குவங்க ஆளுநரின் செயல்பாடுகளைப் பார்த்துவிட்டு தமிழ்நாட்டிலும் இதுபோன்று நிலை ஏற்படும் என மிரட்டுகிறார். கடல் வற்றி கருவாடு சாப்பிடலாம் என குடல் வற்றி செத்துப்போன கொக்கின் நிலை தான் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்படும். திமுகவுக்கு முடிவுரை எழுத உங்கள் முப்பாட்டனால் கூட முடியாது.
தி.மு.க ஆட்சியில் மட்டுமே சிறுபான்மை மக்கள் என்றும் பாதுகாப்பாக இருப்பார்கள். மக்கள் நலத்திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களிடம் சென்றடைய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“தவெக அமைச்சர் சரத்குமார் பதவி விலக வலியுறுத்தி.. திமுக மாணவரணி போராட்டம்.. ஸ்தம்பித்த தமிழ்நாடு”
-
மதிமுகவின் வரலாறு அறிந்தவர்கள் திமுகவினர்.. So நீங்க போய் விசில் அடிங்க.. -மதிமுகவுக்கு சிவசங்கர் பதிலடி!
-
விஜய்க்கு சொந்தப் புத்தி இல்லை என்பதற்கு இதுவே சாட்சி... வெளுத்து வாங்கிய முரசொலி!
-
“திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்.. பிரம்மாண்ட விழா.. கழகத்தில் இணைந்த 5,000 மாற்றுக் கட்சியினர்”
-
“ஓய்வை அறிவித்த இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ்.. கட்டாயப் படுத்தப்பட்டாரா?” - முழு விவரம் அறிய!