Tamilnadu
படு ஸ்பீடு..கார் ரேஸால் வந்த வினை: சூப்பர் மார்கெட்டில் புகுந்ததில் ஒருவர் படுகாயம்; அண்ணாநகரில் பரபரப்பு
சென்னை அண்ணா நகரின் பிரதான சாலையில் நேற்று இரவு மின்னல் வேகத்தில் 2 சொகுசு கார்களில் கார் ரேஸில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அதில் ஒரு கார் எதிர்பாராதவிதமாக டிரான்ஸ்ஃபார்மர் மற்றும் சூப்பர் மார்க்கெட் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியது.
அப்போது மார்க்கெட் வெளியே இருந்த கடை ஊழியர் ஒசிம் என்பவர் படுகாயம் அடைந்தார். உடனே காரில் இருந்த 2 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றொரு காரில் சட்டென்று தப்பிச் சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து சம்பவ இடத்திற்கு வந்த திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலிஸார் விபத்து பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, சென்னை அண்ணாநகர் மேற்கு பகுதியை சேர்ந்த சாமிநாதன் என்பவருக்கு சொந்தமான கார் என்றும் அந்த காரினை அவரது மகன் ராஜேஷ் தன்னுடைய நண்பர்களோடு சேர்ந்து ரேஸில் ஒட்டியதும் தெரியவந்துள்ளது.
எனவே தப்பியோடிய அனைவரையும் போலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!