Tamilnadu
கட்டிப்பிடித்து சண்டையிட்டதில் விபரீதம்: 30 அடி உயரத்திலிருந்து விழுந்து ஒருவர் பலி; போதையில் அட்டகாசம்!
சென்னை கோட்டூர்புரம் சித்ரா குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் குமரன். இவர் கார் ஓட்டுநராக உள்ளார். இவருடைய நண்பர் சார்லி ஜான். அதே பகுதியை சேர்ந்தவர். கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று இரவு 12 மணி அளவில் இருவரும் ஒன்றாக காலி இடத்தில் மது அருந்தி உள்ளனர். அப்போது இருவருக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை ஏற்பட்டுள்ளது. இதன் பின்னர் சித்ரா குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் F பிளாக்கில் மூன்று மாடிகள் உள்ள குடியிருப்பின் மொட்டை மாடிக்கு சென்றுள்ளனர்.
பின்னர் மொட்டை மாடியில் வைத்து இருவருமே கட்டிப்பிடித்து ஒருவரை ஒருவர் தள்ளி மீண்டும் சண்டையிட்டுள்ளனர். பின்னர் இருவருமே நிலைதடுமாறி 30 அடி உயமுள்ள மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளனர்.
பலத்த சத்தத்துடன் இருவரும் கீழே விழுந்ததில் குமரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். சார்லி ஜான் அருகில் உள்ள மரத்தில் உள்ள விழுந்ததால் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு கால் முறிந்தது.
இதுகுறித்து கோட்டூர்புரம் போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“லண்டன் போய் முதலீடு ஈர்த்த லட்சணம் என்னன்னு தெரிஞ்சு போச்சு..” - விஜயை வெளுத்து வாங்கிய ஆர்.எஸ்.பாரதி!
-
ரெய்டு மற்றுமொரு திசைதிருப்பும் அரசியல் : த.வெ.க அரசுக்குத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
3 நாள் விடுமுறை - கூடுதல் பேருந்துகளை விட வேண்டும் என்ற அறிவு கூட இல்லாத சேடிஸ்ட் த.வெ.க அரசு!
-
“த.வெ.க பொறுக்கிகளால் பெண் போலீசாருக்கே பாதுகாப்பில்லை” : தி.மு.க IT Wing கண்டனம்!
-
அமைச்சர் நிர்மல்குமார் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் : சபாநாயகரிடம் தி.மு.க கடிதம்!