Tamilnadu
மட்டன் பிரியாணியில் வெந்து கிடந்த பல்லி.. அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் : பிரபல ஹோட்டலில் நடந்தது என்ன?
சென்னை புரசைவாக்கம் பகுதியில் பிரபலமான பிரியாணி கடை ஒன்று உள்ளது. இங்கு வந்த அப்பாஸ் என்ற இளைஞர் மட்டன் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். பிரியாணியை சாப்பிட்டு முடிக்கும் நேரத்தில் அதில் பல்லி கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இது குறித்து சர்வரிடம் கேட்டபோது அவர் சரியாகப் பதில் சொல்லவில்லை. இதனால் கடையிலிருந்த உரிமையாளரிடம் அப்பாஸ் கேட்டுள்ளார். இதற்கு அவர், இதைக்கூட பார்க்காமலா வேலை செய்வ என சர்வரை திட்டியுள்ளார். மேலும் இப்படி நடந்ததற்குக் கொஞ்சம் கூட பொறுப்பேற்காமல் அலட்சியமாக இருந்துள்ளார்.
பல்லி கிடந்த பிரியாணியை சாப்பிட்டதால், அப்பாஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் சென்றார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். இதையடுத்து 'என் உயிருக்கு ஏதாவது ஆகிவிட்டால் சம்பந்தப்பட்ட உணவகம்தான் பொறுப்பு' என அபாஸ் தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக, பிரியாணியில் பல்லி, புழு இருக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது பிரியாணி பிரியர்களை பீதியடையச் செய்துள்ளது.
Also Read
-
ரூ.145 கோடியில் தொழிற்பேட்டைகள், தொழிலாளர்கள் தங்கும் விடுதி... திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
-
ஒரே மாதத்தில் 46,122 தெருநாய்களுக்கு தடுப்பூசி.. சென்னை மாநகராட்சி தகவல்! - முழு விவரம் உள்ளே!
-
“இளையராஜா மீது முதலமைச்சர் பாசம் வைத்ததற்கு இதுதான் காரணம்...” - முரசொலி தலையங்கம் நெகிழ்ச்சி!
-
நிதி நிறுவன மோசடி வழக்கு... பாஜக கூட்டணியை சேர்ந்த தேவநாதனுக்கு இடைக்கால ஜாமின் !
-
“நிலவில் முதலில் கால் வைத்தது பாட்டிதான் என்றுகூட சொல்வார்கள்!” : பாஜக-வினரை விமர்சித்த கனிமொழி எம்.பி!