Tamilnadu
கண்முன்னே திருடுபோன சைக்கிள்.. மீட்டு கொடுத்த போலிஸ்: நெகிழ்ச்சியடைந்த சிறுவன்!
சென்னை புரசைவாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருபவர் கிரிஷ். சிறுவனான இவர் கடந்த 3ம் தேதி இரவு தனது குடியிருப்பு பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் கிரிஷின் சைக்கிளைத் திருடிச் சென்றுள்ளார். இதைப்பார்த்த சிறுவன் அவரை துரத்திச் சென்று பிடிக்க முயன்றுள்ளார். ஆனால் அதற்குள் அவர் வேகமாகச் சைக்கிளை ஓட்டி அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.
பின்னர், சிறுவன் கிரிஷ் போலிஸாரிடம் புகார் அளித்தார். இதன்பேரில் போலிஸார் வழக்க பதிவு செய்து அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதியிலிருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
இதையடுத்து சைக்கிளை திருடிச் சென்றது மாங்காடு பகுதியைச் சேர்ந்த அஸ்ரர் என்ற வாலிபர் என்பது தெரிந்தது. பின்னர் போலிஸார் வாலிபரைக் கைது செய்து அவரிடம் இருந்த சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
பின்னர், கீழ்ப்பாக்கம் காவல்துறை துணை ஆணையர் கார்த்திகேயன் நேரடியாகச் சிறுவன் வீட்டிற்குச் சென்று மீட்கப்பட்ட சைக்கிளை அவரிடம் ஒப்படைத்தார். இதைக் கண்டு சிறுவன் நெகிழ்ச்சியடைந்து போலிஸாருக்கு மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!