Tamilnadu
நண்பருடன் சேர்ந்து மகளை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தை.. போக்சோவில் கைது செய்த போலிஸ்!
விழுப்புரம் மாவட்டம் வி.சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர்.
அப்போது சிறுமி கர்ப்பமாக இருந்தை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து போலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலிஸார் அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.
இதில், சிறுமியின் தந்தை கோவிந்தன் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் கடந்த ஆண்டு தனது நண்பர் முனுசாமி என்பவருடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து போலிஸார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து தந்தை கோவிந்தன் அவரது நண்பர் முனுசாமி ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!
-
”ஒடுக்கப்பட்டோரின் போராட்டங்களுக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்தவர் சுதாகர் ரெட்டி” : முதலமைச்சர் இரங்கல்!
-
2035-ம் ஆண்டு விண்வெளி ஆய்வு மையம், 2040-ல் நிலவில் தரையிறங்கும் திட்டம் - இஸ்ரோ தலைவர் பேச்சு !
-
"ஹமாஸின் தலைநகரமான காசா அழிக்கப்படும்"- இஸ்ரேல் அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை !