Tamilnadu
சைக்கிளை திருடி தப்பிய இளைஞன்; நொந்துப்போய் போலிஸில் புகார்; சிறுவனுக்காக களத்தில் இறங்கிய துணை ஆணையர்!
சென்னை புரசைவாக்கம் ஹைரோடு பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் சிறுவனின் சைக்கிளை ஒரு இளைஞர் திருடி ஒட்டிச் சென்றுள்ளார்.
அதனை கண்ட அந்த சிறுவன் தனது சைக்கிள் திருடப்பட்டு மர்ம நபர் ஒருவர் ஓட்டிச் சென்றதை கண்டு விரட்டிச் சென்றுள்ளான். எனினும் அந்த திருடன் சைக்கிளை ஓட்டிக் கொண்டு தப்பிச்சென்றுள்ளான்.
இதனையடுத்து தனது கண்ணெதிரே சைக்கிள் திருடப்பட்டது குறித்து காவல் நிலையத்தில் அச்சிறுவன் புகார் அளித்திருக்கிறான்.
இது குறித்து சென்னை கீழ்பாக்கம் காவல்துறை துணை ஆணையர் கார்த்திகேயனுக்கு தெரியவர உடனடியாக சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டு சிறுவனிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, சிறுவன் அளித்த புகாரின் பேரில் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டது மட்டுமல்லாமல் கண்டுபிடிக்கப்பட்ட சைக்கிளை நேரடியாக சிறுவன் வீட்டிற்கே சென்று துணை ஆணையர் கார்த்திகேயன் ஒப்படைத்த செயல் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
தனது சைக்கிளை கண்டுபிடித்து கொடுத்ததற்காக அந்த சிறுவன் துணை ஆணையருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளான். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
வாக்கு எண்ணிக்கை வீடியோவை காணவில்லை என எப்படி கூற முடிகிறது? : தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் காட்டம்!
-
“இனி நீதிமன்றங்கள் முன்புதான் மக்கள் போராடுவார்கள்” : சென்னை உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டுவது என்ன?
-
அதிக விலைக்கு மின்சாரத்தை வெளிச்சந்தையில் வாங்குவது ஏன்? : த.வெ.க அரசுக்கு மு.வீரபாண்டியன் கேள்வி!
-
“தூக்கத்திலிருந்து வெளியே வாங்க முதலமைச்சர் விஜய்.. மக்கள் கஷ்டப்படுகிறார்கள்” : இ.பரந்தாமன் காட்டம்!
-
10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு.. தேர்வு தேதிகள், முடிவுகள் வரை! : முழு விவரம் உள்ளே!