Tamilnadu
விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகளிடம் சில்மிஷம்.. ஆசாமியை கம்பத்தில் கட்டிவைத்து அடித்த மக்கள்!
தேனி மாவட்டம், பெரியகுளத்தை அடுத்த வடுகப்பட்டி பகுதியில் சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்க வந்த ஒருவர் சிறுமிகளிடம் அத்துமீறியுள்ளார். இதனால் அவர்கள் கூச்சலிட்டுள்ளனர்.இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அந்த நபரை பிடித்து அங்கிருந்த கம்பத்தில் கட்டிவைத்து தர்ம அடி கொடுத்தனர்.
இது பற்றி போலிஸாருக்க தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் அங்கு வந்த போலிஸார் பொதுமக்களிடமிருந்து அந்த நபரை மீட்டு விசாரணை செய்தனர். இதில் அவர் அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்த பாண்டி என்பது தெரியவந்தது.
பொதுமக்கள் அடித்ததில் அந்த நபருக்குக் காயம் ஏற்பட்டதை அடுத்து போலிஸார் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றனர். பின்னர் அவர் மீது வழக்குப் பதிவு செய்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரைப் பொதுமக்கள் கட்டிவைத்து அடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“தந்தை பெரியார், அம்பேத்கர் பெயர் நீக்கம் என்பது ஒரு திட்டமிட்டச் செயல்!”: மு.வீரபாண்டியன் கடும் கண்டனம்!
-
“மரியாதையும், பாதுகாப்பான கல்விச்சூழலும் கிடைப்பது குழந்தைகளின் உரிமை!” : கனிமொழி எம்.பி!
-
கிரிக்கெட் விளையாட்டு : பந்து தலையில் தாக்கி 11 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம் - காஞ்சியில் அதிர்ச்சி!
-
கிராண்ட் ஸ்லாம் ஓபன் டென்னிஸ் இன்று தொடங்குகிறது.. கோடிகளில் பரிசுத் தொகை.. களமிறங்கும் முன்னணி வீரர்கள்!
-
திமுக தலைவருக்கான பாதுகாப்பு குறைப்பு.. தவெக அரசின் அரசியல் உள்நோக்கமா? : தலைவர்கள் கடும் கண்டனம்!