Representational image
Tamilnadu
500 ரூபாய் கடனை திருப்பிக் கேட்டதற்காக காதை கடித்த நபர்... புதுக்கோட்டையில் அதிர்ச்சி!
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் கிராம பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் சலாம். அதே பகுதியில் வசித்து வருபவர் அப்துல் முகமது. இவருக்கு அப்துல் சலாம் ரூ.500 கடனாக கொடுத்துள்ளார்.
இந்தப் பணத்தைப் பல நாட்களாக திருப்பி கொடுக்காமல் இருந்து வந்துள்ளார் அப்துல் முகமது. இதனால் கோபமடைந்த அப்துல் சலாம் 'கடனாக கொடுத்த பணத்தை திருப்பி கொடு' எனக் கேட்டுள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆவேசமடைந்த அப்துல் முகமது, 'கொடுத்த கடனை திருப்பி கேட்பியா' எனக் கூறி அப்துல் சலாமின் காதைக் கடித்துள்ளார். இதனால் அவரது காதில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் அறந்தாங்கி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்துள்ளார். மேலும் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து அப்துல் முகமதுவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடனாகக் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டதற்காக காதை கடித்த சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
உதயநிதி ஏற்படுத்திய எழுச்சி : தனக்குத் தானே ‘சூனியம்' வைத்துக் கொண்ட முதலமைச்சர் விஜய்!
-
“தவெக ஆதரவு.. அமைச்சர் பதவி ஆசை.. ராஜினாமா செய்ய வைகோ நிர்பந்தித்தார்” : மதிமுக எம்.எல்.ஏ-க்கள் பேட்டி!
-
“மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 பற்றி ‘பேச்சு - மூச்சே’ இல்லை!” : தங்கம் தென்னரசு விமர்சனம்!
-
“மாற்றம் என சொன்னது பெயர் மாற்றம் தானா?.. இதற்கு எதற்கு முதலமைச்சர்?”: வெளுத்து வாங்கிய உதயநிதி ஸ்டாலின்!
-
“Blast இல்லை Waste .. முக்கிய வாக்குறுதிகள் பற்றி மூச்சே விடாத பட்ஜெட்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!