Tamilnadu
தலையில் கல்லைப் போட்டு வாலிபர் கொடூர கொலை .. 2 பேர் கைது: விசாரணையில் அதிர்ச்சி!
திண்டுக்கல் மாவட்டம், முத்தழகுபட்டி பகுதியைச் சேர்ந்தவர் அருள் விசுவாசம். வாலிபரான இவர் லோடுமேனா வேலைபார்த்து வந்தார். இவர் தனது பகுதியைச் சேர்ந்த ஆரோக்கிய ஸ்டீபன், குறசெபாஸ்டின் ஆகியோருடன் திண்டுக்கல் வடக்கு ரத வீதியில் மது குடித்துள்ளார்.
அப்போது இவர்கள் மூன்று பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஆரோக்கிய ஸ்டீபன், குறசெபாஸ்டியன் ஆகியோர் அங்கிருந்து பெரிய கல்லை எடுத்து அருள் விசுவாசத்தின் தலையில் போட்டுள்ளனர்.
இதில், அவரது தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் விசுவாசத்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து ஆரோக்கிய ஸ்டீபன், குறசெபஸ்டின் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!