Tamilnadu
மெக்கானிக் பேரில் பேட்டரி திருட்டு: கோவை போலிஸை அதிரவைத்த வாக்குமூலம்; பலே கில்லாடி சிக்கியது எப்படி?
கோவை ஏடிஎம்களில் தொடர்ந்து பேட்டரிகள் திருடு போகக்கூடிய சம்பவங்கள் நடந்தது. காவல்துறையினர் விசாரணை நடத்தி திருடர்களை பிடிக்க சென்றனர். காவல்துறையினரின் கண்களில் மண்ணை தூவி பேட்டரிகள் களவாடிய சம்பவங்கள் கோவையில் நடந்தேறி வந்தன.
இந்நிலையில், வெரைட்டி ஹால் பகுதி ஏடிஎம் ஒன்றில் பேட்டரிகள் காணாமல் போனது தெரிய வந்தன. இதனைத் தொடர்ந்து, வெரைட்டி ஹால் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், சிங்காநல்லூர் பகுதியிலும் பேட்டரி காணாமல் போனது தெரிய வந்தன. உடனடியாக சிங்காநல்லூர் காவல்துறையினர் பேட்டரி திருடனை பிடிக்க களமிறங்கினர்.
ஒரே நாளில் அடுத்தடுத்து பேட்டரிகள் திருடுபோன சம்பவத்தால் காவல்துறையினர் ஏடிஎம்களில் முகாமிட்டனர். இந்த நிலையில் சிங்காநல்லூர் காவல் ஆய்வாளர் அருண்குமார் தலைமையிலான காவல்துறையினர் பேட்டரி காணாமல் போன வங்கி அதிகாரிகள் தந்த புகாரின் அடிப்படையில் புலனாய்வு செய்த நிலையில், செந்தில்குமார் என்ற நபரை கைது செய்தனர். செந்தில் குமாரரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் காவல்துறையினர். அப்போது அதிர்ந்து போகும் அளவிற்கு வாக்குமூலம் தந்திருக்கிறார்.
அதன்படி, பேட்டரி திருடுவதற்கு சாதாரணமாக சென்றால் காவல்துறையினரிடம் மாட்டிவிடுவோமென நினைத்து பேட்டரி மெக்கானிக் போன்று ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று பட்டப்பகலிலேயே பேட்டரிகளை திருடி இருக்கின்றார். பேட்டரிகளை கழட்டும்போது வாடிக்கையாளர்கள் கேட்டால் நான் மெக்கானிக் என்றும் பேட்டரியை சரி செய்ய வந்து இருப்பதாகவும் தெரிவித்து லாவகமாக பேட்டரியை திருடி பழைய இரும்பு கடையில் விற்று வந்திருக்கின்றார்.
இரவு நேரங்களில் பேட்டரி திருடுவதற்கு ஏடிஎம்களுக்கு சென்றால் காவல்துறையினர் வந்து விடுவார்களோ என்று எண்ணி பேட்டரி திருடும் திருட்டு சம்பவத்தை பட்டப்பகலிலேயே துணிகரமாக நிகழ்த்தி செந்தில்குமார் கோவை ஏடிஎம்களில் பேட்டரிகளை கொள்ளையடித்து இருக்கின்றார்.
திருடர்களை பிடிக்க இரவில் காவல்துறையினர் ரோந்து செல்கின்ற நிலையில் பட்டப்பகலில் மெக்கானிக் போர்வையில் ஏடிஎம்களில் திருடினால் மாட்டிக் கொள்ள மாட்டோம் என்கின்ற உத்தியினை கையாண்ட செந்தில் பேட்டரிகளை மட்டுமே குறிவைத்து அதுவும் பட்டப்பகலிலேயே திருடுவது வாடிக்கையான செயலாக கடைபிடித்து இருக்கின்றார்.
பேட்டரிகளை மட்டுமே திருடி போலீசாரிடம் அகப்படாமல் இருக்க செந்தில்குமார் வகுத்த செயல்திட்டம் போலீசையே அதிர செய்திருக்கின்றன. திருடர்களை பிடிப்பதற்காக போலீஸ் மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு மாறாக செயல்பட்டு பேட்டரிகளை திருடிய திருடன் செந்தில்குமார் சிங்காநல்லூர் போலீசார் பிடித்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!