Tamilnadu
திருமணமான 6 மாதத்தில் மனைவி தற்கொலை.. விபரீத முடிவெடுத்த கணவன் : நடந்தது என்ன?
கள்ளக்குறிச்சி மாவட்டம், குணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அரிகோவிந்தன். இவருக்குக் கும்பகோணத்தைச் சேர்ந்த கீர்த்திகா என்ற பெண்ணுடன் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது.
இதையடுத்து கணவர் வீட்டில் கீர்த்திக்காக வசித்து வந்தார். பின்னர் மூன்று மாதங்களுக்கு முன்பு அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் மனைவி இல்லாமல் நான் மட்டும் எப்படி வாழ்வது என நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் வேதனையுடன் கோவிந்தன் கூறிவந்ததுள்ளார்.
இதையடுத்து கடந்த வாரம் மனைவி புதைத்த இடத்திற்குச் சென்ற அவர் நானும் அவர் சென்ற இடத்திற்கே செல்லப்போகிறேன் என கூறி கதறி அழுதுள்ளார். இதைப்பார்த்த அவரது நண்பர்கள் ஆறுதல் கூறி அவரை அங்கிருந்து வீட்டிற்குக் கூட்டிவந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவிலிருந்து அவர் காணவில்லை என்பதால் பல இடங்களில் நண்பர்கள் தேடிப் பார்த்துள்ளனர். அப்போது, அதேபகுதியில் இருக்கும் விவசாய கிணற்றில் விழுந்து அரிகோவிந்தன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“தமிழ்நாட்டின் சாபக்கேடு எச்.ராஜா” : அமைச்சர் சேகர்பாபு கடும் தாக்கு!
-
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா இந்துக் கோயிலா? - பரவும் வதந்திக்கு TN Fact Check விளக்கம்!
-
“எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?” - நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. கலாய்!
-
பா.ஜ.க-வின் Fake ID தான் அ.தி.மு.க : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கு!
-
புதிய மேம்பாலம் திறப்பு முதல் முதலீட்டாளர்கள் மாநாடு வரை... முதலமைச்சரால் விழாக் கோலமான மதுரை - விவரம்!