Tamilnadu
#BREAKING முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது தி.மு.க - சூடுபிடிக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தி.மு.க முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தனது கூட்டணி கட்சிகளுடன் வார்டு பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தி வந்தன.
தி.மு.க கூட்டணியில் உள்ள காங்கிரஸ், ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் தி.மு.க. மாவட்டச் செயலாளர்களுடன் வார்டு பங்கீடு குறித்துப் பேசி வந்தனர்.
தி.மு.க மாவட்ட செயலாளர்களுடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தியதில் பெரும்பாலான இடங்களில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து தி.மு.க போட்டியிடும் வார்டுகளுக்கான தி.மு.க முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டார்.
தூத்துக்குடி, கும்பகோணம், காஞ்சிபுரம் மாநகராட்சிகளுக்கான தி.மு.க வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம், கோவில்பட்டி, திருக்கோவிலூர், கோட்டக்குப்பம் ஆகிய நகராட்சிகளுக்கும் தி.மு.க வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், மதுராந்தகம், விக்கிரவாண்டி, வளவனூர், திருவெண்ணெய்நல்லூர், அரகண்டநல்லூர், திருப்பனந்தாள், திருவிடைமருதூர், ஆடுதுறை, திருபுவனம், வேம்பத்தூர், திருநாகேஸ்வரம், சோழபுரம், சுவாமிமலை, பாபநாசம், அய்யம்பேட்டை, மெலட்டூர், இடைக்கழிநாடு, அம்மாபேட்டை, கழுகுமலை, புதூர், கடம்பூர், எட்டயபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத், கருங்குழி, அச்சரப்பாக்கம் ஆகிய பேரூராட்சிகளுக்கும் தி.மு.க வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மீதமுள்ள மாவட்டங்களில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர்கள் விவரம் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ புதிய உயரங்களை அடைவதில் பெருமிதம் கொள்வோம்!: முதலமைச்சர் நெகிழ்ச்சிப் பதிவு!
-
“மனிதநேயமிக்கவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : நடிகர் விஜய் ஆண்டனி புகழாரம்!
-
”இது நம்ம ஆட்டம் 2026”- மாநில அளவில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கங்களை வழங்கிய துணை முலமைச்சர் உதயநிதி
-
உலகளவில் முதன்முறையாக.. மெட்ரோ சுரங்கப்பாதைக்கு மேல் கட்டப்பட்டு மேம்பாலம்! - அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு!
-
சமூக நீதிக்கான சரித்திர நாயகர் : இந்திய அளவில் ஆதிதிராவிட பழங்குடியின மக்கள் முன்னேற்றம்!