Tamilnadu
திடீரென கடைக்குள் புகுந்த கார்.. தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு: நள்ளிரவில் நடந்தது என்ன?
மதுரை பார்க்டவுன் பகுதியைச் சேர்ந்தவர் சுகன். இவர் தனது நான்கு நண்பர்களுடன் சேர்ந்து காரில் சிம்மக்கலில் இருந்து சேதுபதி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.
இவர்கள் அனைவரும் மதுஅறிந்தியுள்ளனர். காரை சுகன் ஓட்டிவந்துள்ளார். பின்னர் கார் சேதுபதி சிக்னல் அருகே வந்த போது மது போதையிலிருந்ததால் சுகனின் கட்டுப்பாட்டை இழந்த கார் அங்கிருந்து கடை ஒன்றில் மோதியது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் விபத்தில் படுகாயமடைந்த நான்கு பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் சிறிது நேரத்திலேயே கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இது குறித்துத் தீயணைப்பு வீரர்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த தீயணைப்பு வீரர்களை சில மணி நேரத்திலேயே தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் கார் முற்றிலும் எரிந்து சாம்பலானது.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!