Tamilnadu
சரக்கு தராததால் ஆத்திரம்.. இரவோடு இரவாக மதுக்கடைக்குத் தீவைத்த கும்பல்.. ஈரோட்டில் பரபரப்பு!
ஈரோடு மாவட்டம், தனிராவுத்தர் குளம் அருகே மதுக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 22ம் தேதி இந்த கடைக்கு மர்ம நபர்கள் இரண்டு பேர் பெட்ரோல் பாட்டிலை வீசி கடைக்குத் தீவைத்துக் கொளுத்தியுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் கடையிலிருந்த ரூ.44 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்கள் எரிந்து நாசமாயின.
இந்த சம்பம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியிலிருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து சங்கர் என்ற வாலிபரை போலிஸார் கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை நடத்தியதில், சம்பவத்தன்று கடை மூடும்போது, மதுபாட்டில் கேட்டதால் ஊழியர்கள் தரமறுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்ததால் இரண்டு பேரும் சேர்ந்து இரவு கடைக்கு தீ வைத்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதையடுத்து போலிஸார் சங்கரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். உடன் இருந்த மற்றொரு வாலிபரை போலிஸார் தேடி வருகின்றனர்.
Also Read
-
“மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 பற்றி ‘பேச்சு - மூச்சே’ இல்லை!” : தங்கம் தென்னரசு விமர்சனம்!
-
“மாற்றம் என சொன்னது பெயர் மாற்றம் தானா?.. இதற்கு எதற்கு முதலமைச்சர்?”: வெளுத்து வாங்கிய உதயநிதி ஸ்டாலின்!
-
“Blast இல்லை Waste .. முக்கிய வாக்குறுதிகள் பற்றி மூச்சே விடாத பட்ஜெட்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க அரசின் நிதிநிலை அறிக்கை: இதிலும் திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய விஜய்!
-
முதுகெலும்பு இல்லாத த.வெ.க அரசு : காவிரிக்காக பொங்கிய தி.மு.க - முரசொலி தலையங்கம்!