Tamilnadu

தாய் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை சுட்டுக்கொன்ற 14 வயது சிறுவன் - விளையாட்டால் நடந்த விபரீதம்!

பஞ்சாப் மாநிலம் லாகூரைச் சேர்ந்தவர் நஹீத் முபாரக். இவர் பாகிஸ்தானில் உள்ள தனது கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து, பல ஆண்டுகளாக இந்தியாவில் சுகாதாரத்துறை ஊழியராக பணியாற்றி வருகிறார்.

இவருடன் அவரது மூத்த மகன் தைமூர் (22) மற்றும் 14 வயதாகும் இளைய மகன், 17 மற்றும் 11 வயதாகும் மகள்கள் இரண்டுபேர் என 5 பேருடன் வசித்து வந்தனர். இந்நிலையில், இவரது வீட்டில் இருந்து துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டதாக அக்கம்பக்கத்தினர் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார், நஹீத் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, மகன் மற்றும் மகளுடன் நஹீதும் சுட்டுக்கொல்லப்பட்டு இறந்துகிடந்தனர். இவரது 14 வயது மகன் மட்டும் காயமில்லால் மேல் தளத்தில் இருந்துள்ளான்.

அவனிடம் போலிஸார் விசாரணை நடத்திய நிலையில் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்ததைத் தொடர்ந்து, அவன் மீது சந்தேகம் அடைந்த போலிஸார் அவனை விசாரிக்கையில் பகீர் தகவலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக போலிஸார் தரப்பில் கூறுகையில், விளையாட்டு மோகத்தில் இருந்த அந்தச் சிறுவனை அவரது தாய் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரத்தில் இருந்த சிறுவன், தனது குடும்பத்தினர் வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கும் போது கைத்துப்பாக்கியால் துட்டுக்கொன்றதாக விசாரணையில் தெரியவந்ததாக தெரிவித்தனர். பப்ஜி விளையாட்டுக் காரணமாக மேலும் 4 பேர் உயிர்பழியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: 4வது முறையாக கோப்பை வென்றது ‘பெர்த் ஸ்கார்சர்ஸ்’ - வழியும் ரத்தத்தோடு வெற்றியை கொண்டாடிய ரிச்சர்ட்ஸன்!