Tamilnadu

சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் ‘தமிழ்நாடு’.. சமூகநீதி வாய்பாட்டை உருவாக்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

“இந்தியா டுடே’’ இந்தி பத்திரிகையின் முன்னாள் நிர்வாக ஆசிரியரும் ஊடகம் மற்றும் சமூகவியலில் நூல்களை எழுதியிருப்பவருமான பத்திரிகையாளர் திலீப் மண்டல் தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதிய கட்டுரை நீரா மஜூம்தாரால் தணிக்கை செய்யப்பட்டு, “கோவில்களுக்குள் “நீட்’’, மு.க.ஸ்டாலினின் தமிழ்நாடு ஒரு புதிய சமூகநீதி வாய்பாட்டை உருவாக்கியுள்ளது.

மண்டல் பிளஸ் மார்க்கெட் என்ற தலைப்பிலும், வடநாட்டில் ஏற்பட்டுள்ள எதிர்க்கட்சிக்கான வெற்றிடத்தை மு.க.ஸ்டாலின் உணர்ந்திருக்கக்கூடும் அதன் அரசியல் இந்து - முஸ்லிம் இரட்டை நட்சத்திர மோதலாகக் குறைக்கப்பட்டுவிட்டது. தி.மு.க. தலைவர் சமூக நீதி தடியைக் கையில் எடுத்துள்ளார்’’ என்ற துணைத் தலைப்பிலும், வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

சுகாதாரத் துறையில் தமிழ்நாடு சிறப்பாக செயல்படுகிறது !

இதற்கிடையில் தி.மு.கழகம் அதன் தமிழை மையமாகக் கொண்ட அரசியலைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தது அனைத்து தொழில் படிப்புகளிலும் அரசுப் பள்ளிகளில் தமிழ் வழி (மீடியம்) கல்வி பயின்ற மாணவர்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கிய அதன் கொள்கை ஏழைத் தமிழர்களை நோக்கமாகக் கொண்டதாகும்.

அதேபோன்று மு.க.ஸ்டாலின் அவர்கள் “வீடுதேடி கல்வி’ என்றத் திட்டத்தை பொதுப் பள்ளி மாணவர்களைக் கருத்தில் கொண்டு செயல்படுத்தினார். அதன் மூலம் ஒவ்வொரு குழந்தையும் கொரோனோ தொற்று காலத்தில் கல்வி பெற முடிந்தது. ஏழை மாணவர்களுக்கு இணைய வழி (ஆன்லைன்) வகுப்புகளில் கலந்து கொள்வது மிகவும் கடினமாகும். எனவே, அரசு தன்னர்வத் தொண்டர்களை வாடகைக்கு அமர்த்தி சமுதாயங்களால் தேர்ந்தெடுக்கப்படும் பணிக்கான இடத்துக்கு சென்று, ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறார்கள்.

கடைகளிலும், அமைப்புகளிலும் பணியாற்றும் பணியாளர்கள் உட்காருவதற்கான உரிமைச் சட்டம் ஒன்றையும் தமிழ்நாடு இயற்றி உள்ளது. அதன்மூலம் அவர்கள் உட்காருவதற்கான உரிமையைக் கோர முடியும். கேரளாதான் இத்தகைய சட்டத்தை நிறைவேற்றிய முதல் மாநிலம் ஆகும்.

தமிழ்நாடு ஏற்கனவே சுகாதாரத்துறையில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் மாநிலமாகும். மு.க.ஸ்டாலின் அவர்கள் முந்தைய அரசின் பல திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்துவதன் மூலம் அதனைத் தொடர்ந்து செயல்படச் செய்து வருகிறார். சமூக நீதி அரசியல் மாநில மக்களுக்காக சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று உரிமை கோரும் நிலையில் அவர் இருக்கிறார்.

மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் அமைக்க திட்டமிட்டிருக்கும் சமூக நீதி முன்னணி கருத்து கூட்டாட்சி முறையின் அடிப்படையில் செயல்படும் என்று தெளிவுபடுத்தியுள்ளார். இதன் மூலம் அவர் இதர கட்சிகளுக்கு அவர்களும் சம அளவிலான பங்குதாரர்களாகச் செயல்படுவதற்கு இணைந்து வரலாம் என்ற சமிக்ஞையைக் காட்டியுள்ளார்.

ஆனால் இந்தப்பிரச்சினையில் அவருடைய நற்சாட்சிப் பத்திரங்கள் மற்ற எவரையும் விட அவருக்கே மிகச் சிறப்பாக இருப்பதால், அத்தகைய எந்த ஒரு அமைப்பின் தலைமையும் தானாகவே தமக்கு வந்து சேரும் என்று அவர் நினைக்கலாம்” இவ்வாறு திலீப் மண்டல் 28.01.2022 அன்று எழுதிய கட்டுரையில் தெரிவித்துள்ளார்.