Tamilnadu
சகோதரி, பக்கத்து வீட்டு பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த கணவர்... சிறையில் தள்ளிய மனைவி - பின்னணி என்ன?
சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (30). தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் வீட்டில் தனியாக இருக்கும்போது, அக்கம்பக்கத்தைச் சேர்ந்த பெண்களை அவர்களுக்கு தெரியாமல் ஆபாசமாக படம் எடுத்து, அதனைக் கண்டு ரசிக்கும் செயலில் இறங்கியுள்ளார்.
இதனிடையே சில நாட்களுக்கு முன்பு இவரது வீட்டிற்கு அருகில் வசிக்கும் பெண் ஒருவரை சேகர் வீடியோ எடுக்கும்போது கையும் களவுமாக மாட்டியுள்ளார். அந்தப் பெண் வீடுபுகுந்து சேகர் மனைவி முன்பே அவரை சரமாரியாக தாக்கி எச்சரித்துவிட்டுச் சென்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சேகரின் மனைவி பிரித்திகா அவரது செல்போனை வாங்கிப் பார்த்தபோது எந்த வீடியோ காட்சிகளும் இல்லாமல் இருந்துள்ளது. இதனையடுத்து தொடர்ந்து கணவர் சேகரை கண்காணித்த அவரது மனைவி, சேகர் தூங்கும்போது அவருக்கு தெரியாமல் சேகரின் செல்போனை எடுத்து சேதனை செய்துள்ளார்.
அப்போது, தன் சகோதரி உட்பட பக்கத்து வீட்டு பெண்கள் குளிப்பதையும், வாசலில் கோலம் போடுவது போன்ற அசைவுகளையும் ஆபாசமாக வீடியோ எடுத்து சேமித்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
மேலும் கணவரின் இச்செயலுக்கு தண்டனை பெற்றுத் தரவேண்டும் என்று எண்ணி, அந்த செல்போனுடன் திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் போரில் போலிஸார் சேகர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!
-
தீபாவளி பண்டிகை : சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் - கிளாம்பாக்கத்தில் ஆய்வு செய்த அமைச்சர் சிவசங்கர்!
-
இதற்கெல்லாம் பதில் வருமா? : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு கேள்வி எழுப்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
தீபாவளிக்கு அடுத்தநாள் பொதுவிடுமுறையா? : தமிழ்நாடு அரசின் அறிவிப்பு என்ன?