Tamilnadu
DPI-யில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த நபர்.. கைது செய்த போலிஸ்.. நடந்தது என்ன?
சென்னை நுங்கம்பாக்கத்தில் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அலுவலகம் (DPI) உள்ளது. இந்த அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் இளைஞர் ஒருவர் வந்துள்ளார். சந்தேகப்படும் படியாக இருந்ததால் அவரிடம் அதிகாரிகள் விசாரித்துள்ளனர்.
அப்போது அந்த நபர் தனக்கு பள்ளிக்கல்வித்துறையில் வேலை கிடைத்துள்ளது எனக் கூறி பணி நியமன ஆணைகளைக் காண்பித்துள்ளார். அதைப் பார்க்கும்போது போலியானது என தெரிந்தது.
இதனால் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் உடனே போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் அங்கு வந்த போலிஸார் அவரை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர்.
இதில், அவர் ராயப்பேட்டை பி.வி.கோயில் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பது தெரிந்தது. அவர் பள்ளிக்கல்வித் துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பண மோசடி செய்துள்ளார்.
மேலும் போலியாகப் பணி நியமன ஆணைகளையும் தயாரித்துக் கொடுத்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Also Read
-
சர்வதேச அளவில் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் தொடக்கம்.. சச்சினை முந்திய வரலாற்று நிகழ்வு : முழு தகவல் அறிய!
-
கோவில் குடமுழுக்கில் பிரச்சனை.. தட்டிக்கேட்ட பெண்ணை கொடூரமாக தாக்கிய தவெக நிர்வாகி -கொந்தளிக்கும் மக்கள்!
-
தவெக அரசின் அட்டூழியம்.. புகாரை அடுக்கிய திமுக.. அதிர்ந்து போன ஆளுநர் மாளிகை! - முழு பட்டியல் இதோ!
-
FIFA 2026: திணறிய அர்ஜென்டினா.. உலகையே திரும்பிப் பார்க்க வைத்த கேப் வெர்டே அணி!
-
"ஆள் பிடிப்பதற்காகவே த.வெ.க ஆட்சி நடக்கிறது!" - ஆளுநரிடம் ஆர்.எஸ்.பாரதி அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!