Tamilnadu
கணவருடன் சண்டையிட்டு வெளியேறிய பெண்ணுக்கு ரயில் நிலையத்தில் காத்திருந்த அதிர்ச்சி; திருச்சியில் பரபரப்பு!
திருமணமாகி 4 மாதங்களே ஆன தம்பதியிடையே சண்டை ஏற்பட்டதில் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய பெண்ணுக்கு திருச்சி ரயில் நிலையத்தில் அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
திண்டுக்கல் முள்ளிப்பாடி பஞ்சாயத்து பி.டபிள்யூ காலனியைச் சேர்ந்த தம்பது யுவராஜ் சங்கீதா. இவர்களுக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்திருக்கிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இருவருக்குமிடையே சண்டை ஏற்பட்டிருக்கிறது. இதில் கோபமுற்ற சங்கீதா வீட்டை விட்டு வெளியேறி சென்னையில் இருக்கும் தோழியுடன் சேர்ந்து தங்கி பணியாற்ற எத்தனித்திருக்கிறார்.
இதற்காக திண்டுக்கல்லில் இருந்து அந்தியோதையா ரயிலில் சென்னைக்கு புறப்பட்டிருக்கிறார். இடையே மனமாற்றம் அடைந்த சங்கீதா 10.15 மணியளவில் திருச்சியில் இறங்கியிருக்கிறார்.
அப்போது ரயில் நிலையத்தில் காத்திருந்த சங்கீதாவை சில இளைஞர்கள் சூழ்ந்துக் கொண்டதால் அச்சமுற்ற அவர் அவ்விடத்தை விட்டு வெளியேற முயற்சித்திருக்கிறார். அச்சமயத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே போலிஸார் சங்கீதாவை அந்த கும்பலிடம் இருந்து மீட்டுள்ளனர்.
இதனையடுத்து நடந்ததை கூறவே யுவராஜுக்கு தகவல் தெரிவித்து திருச்சிக்கு வரவைத்துள்ளனர். சங்கீதாவை காப்பாற்றிய ரயில்வே போலிஸருக்கு நன்றி தெரிவித்த யுவராஜ் மனைவியை சமாதானம் செய்து ஊருக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.
Also Read
-
கையை கட்டிக்கொண்டு இருக்க முடியுமா? : ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரிக் கேள்வி!
-
”தமிழ்நாட்டில் இரு மடங்கு அதிகரித்த பட்டு உற்பத்தி” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!