Tamilnadu
பேரூராட்சி அலுவலகத்தில் மோடி படத்தை மாட்டி ரகளை.. ஊழியர்களை மிரட்டிய பா.ஜ.க நிர்வாகி கைது : பின்னணி என்ன?
கோவை அடுத்துள்ள பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகத்திற்குள் புகுந்த பா.ஜ.க அமைப்புசாரா தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமையிலான பா.ஜ.கவினர், அலுவலகத்திற்குள் மோடியின் படத்தை மாட்டினர்.
இதனைப் பார்த்த பேரூராட்சி அலுவலக ஊழியர்கள் அனுமதியின்றி அலுவலகத்திற்கு வந்து புகைப்படம் மாற்றுவது தவறு எனவும் மாஸ்க் அணியாமல் அலுவலகத்திற்குள் வரக்கூடாது எனவும் சுட்டிக்காட்டினர்.
இதனால் பா.ஜ.க.வினருக்கு அலுவலக ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடியின் படம் வைக்க வேண்டும் எனவும் மோடியின் புகைப்படத்தை கழற்றினால் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் பா.ஜ.கவினர் கூறுவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் அத்துமீறி அரசு அலுவலகத்தில் புகுந்து ரகளையில் ஈடுபட்ட பா.ஜ.க நிர்வாகி பாஸ்கரை ஆலாந்துறை காவல்துறையினர் அதிகாலையில் கைது செய்து, காலை 5 மணியளவில் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Also Read
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!