Tamilnadu
வீட்டை விட்டு வெளியேறிய மனைவி.. 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த கொடூர தந்தை.. நடந்தது என்ன?
தூத்துக்குடி மாவட்டம் இடையர்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன். இவரது மனைவி ரேகா. இந்த தம்பதிக்குச் செல்வநரேஷ், முருகவேல், செல்வகணேஷ் என மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனர்.
கூலி வேலை செய்துவரும் ஐயப்பனுக்கும், ரேகாவிற்கும் இடையே குடும்ப பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதனால் மனைவி குழந்தைகளை விட்டுவிட்டு உறவினர் வீட்டிற்குச் சென்றுவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அய்யப்பன் தனது மூன்று குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொலை செய்ய முயன்றுள்ளார்.
இதையறிந்த அவரது உறவினர்கள் உடனே குழந்தைகளை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். அங்கு குழந்தைகளுக்குத் தீவிரமாகச் சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலிஸார் வழக்குப் பதிவு செய்து தந்தை ஐயப்பனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். பெற்ற குழந்தைகளுக்கே தந்தை விஷம் கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!