Tamilnadu
5 நாட்களாகப் போக்கு காட்டிவந்த சிறுத்தை.. வனத்துறையின் பொறியில் சிக்கியது எப்படி?
கோவை மாவட்டம், பி.கேபுதூர் பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் கடந்த 17ம் தேதி சிறுத்தை பதுங்கியது. இதைப் பார்த்து பொதுமக்கள் வனத்துறைக்குத் தகவல் கொடுத்தனர். பின்னர் அங்கு வந்த வனத்துறையில் சிறுத்தையைப் பிடிப்பதற்காக குடோன் மேல்புறம் வலையை விரித்து முன்பக்கம் ஒரு கூண்டு பின்பக்கம் ஒரு கூண்டு வைத்தனர் .
இந்தநிலையில், அந்த சிறுத்தை கூண்டுக்குள் வராமலே 5 நாட்களாக போக்குக் காட்டி வந்தது. பின்னர் வனத்துறையினர் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டனர். பின்னர் தனிப்படை அமைக்கப்பட்டு இரவு பகலாக கண்காணிப்பு கேமிரா மூலம் கண்காணித்து வந்தனர். இதை அடுத்து நேற்று நள்ளிரவில் சிறுத்தை கூண்டுக்குள் சிக்கியது.
மேலும் ஜே. சி. பீ இயந்திரம் கொண்டு அந்த கூண்டு வெளியே எடுத்து சிறுத்தையின் ஆரோக்கியத்தை மருத்துவர் குழு ஆராய்ந்த பின்னர் கோவை வனப்பகுதியில் விடப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிடிபட்ட சிறுத்தை உணவு அருந்தாததால், சோர்வுடன் இருந்தது. பின்னர் அதற்கு உணவுகள் வழங்கப்பட்ட பிறகு ஆனைமலை புலிகள் காப்பகம் அடர்ந்த வனத்தில் சிறுத்தை விடப்பட்டது. சிறுத்தை கூண்டில் சிக்கியது அந்த பகுதி பொது மக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!