Tamilnadu
காலநிலை மாற்றங்களை கண்டறிய நவீன கருவி.. சென்னை ஏர்போர்ட்டில் அசத்தல் ஏற்பாடு: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
சென்னை விமானநிலையத்தில் விமான போக்குவரத்து சேவைப்பிரிவில் காலநிலைகளில் ஏற்படும் மாற்றங்களை கண்டறியும் விதத்தில் நவீன சாதனம் அமைக்கப்பட்டுள்ளது. "ஐ.பி.என்ற இன்டா்நெட் புரோட்டக்கால்" என்ற தானியங்கி தகவல் பரிமாற்ற சாதனம் இந்தியாவில் முதன்முதலில் அமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பருவநிலையில் மாற்றங்கள் ஏற்படும்போது, இந்த தானியங்கி கருவி தானாவே செயல்பட்டு, மேகமூட்டம், பனிப்பொழிவு, ஓடுபாதையில் போதிய வெளிச்சம் இல்லாமை, தெளிவான நிலமை இல்லாமை போன்றவைகளை சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தெரியப்படுத்தும்.
கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் அதற்கு தகுந்தாற்போல் விமானங்கள், ஹெலிகாப்டா்கள் போன்றவைகள் சென்னை விமானநிலையத்திலிருந்து புறப்படுவது, வந்து தரையிறங்குவது போன்றவைகளை பாதுகாப்பாக மாற்றியமைப்பாா்கள். அதோடு இந்த நவீன தானியங்கி ஐ.பி கருவி செயல்பாட்டில் இருப்பதால், மோசமான வானிலை நிலவும் போது சென்னை விமான நிலையத்தில் விமானங்கள், ஹெலிகாப்டா்கள் வந்து தரையிறங்க, புறப்பட சிக்னல்களும் கிடைக்காமல் தடை செய்யும்.
இதனால் சென்னை விமானநிலையத்தில் விமானங்கள், ஹெலிகாப்டா் போன்றவைகளை பாதுகாப்பான முறைகளில் இயக்க முடியும். விபத்துகளை தவிா்க்க முடியும் என்று இந்திய விமானநிலைய ஆணையம் தெரிவித்துள்ளது. இதைப்போன்ற நவீன கருவி சென்னை விமானநிலையத்தோடு சோ்த்து மும்பை, கொல்கத்தா விமான நிலையங்களிலும் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நவீன பாதுகாப்பான புதிய முறை படிப்படியாக இந்தியாவில் உள்ள அனைத்து விமானநிலையங்களுக்கும் விரிவுப்படுத்படவிருப்பதாகவும் இந்திய விமானநிலைய ஆணையம் தெரிவிக்கிறது.
தமிழ்நாட்டின் கோவை மாவட்டம் சூலூா் விமானப்படை தளத்திலிருந்து நீலகிரி மாவட்டத்திற்கு புறப்பட்டு சென்ற ராணுவ ஹெலிகாப்டா் சமீபத்தில் விபத்திற்குள்ளாகி, இந்திய ராணுவ தலைமை தளபதி உட்பட 14 போ் உயிரிழந்த சோகசம்பவம் நடந்தது. அந்த விபத்து பற்றி ஆய்வு நடத்திய குழுவினா், திடீரென ஏற்பட்ட மேகக்கூட்டம் தான் ராணுவ ஹெலிகாப்டா் விபத்துக்கு காரணம் என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
சமூகநீதிப் பிரச்சினையில் கை வைப்பது, சமூக விரோதச் செயலே : த.வெ.க அரசுக்கு கி.வீரமணி கடும் கண்டனம்!
-
தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
“முதுகெலும்பில்லா ஆட்சி தமிழ்நாட்டில் தொடர வேண்டுமா CM sir?” : அப்பாவு கடும் கண்டனம்!
-
குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையால் வந்த வினை : கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!
-
‘ஊரான் வீட்டு நெய்யில உங்க வீட்டுக்கு ஸ்வீட் செய்யாதீங்க!’ : த.வெ.க.வை விமர்சித்த முரசொலி தலையங்கம்!