Tamilnadu
குப்பைத் தொட்டியில் எரிந்த நிலையில் கிடந்த சடலம் : பதற வைக்கும் பரபரப்பு சம்பவம் - போலிஸ் தீவிர விசாரணை!
தேனி மாவட்டம், காமாட்சிபுரம் கிராமத்தில் சாலையோரத்தில் உள்ள குப்பைத் தொட்டியில் குப்பைப் போடுவதற்கு அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் சென்றபோது, அந்த குப்பைத் தொட்டியில் எரிந்த நிலையில் சடலம் ஒன்று இருந்துள்ளது.
அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், இதுகுறித்து போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் எரிந்த நிலையிலிருந்த சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக, அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் எரிந்த நிலையிலிருந்தது ஆண் ஒருவரின் சடலம் என்பதும், அவரை கடுமையாகத் தாக்கி கொலை செய்து பின்னர் எரித்துள்ளதாகவும் போலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து சடலமாக இருந்தவர் யார் என்பது குறித்தும், யார் இவரைக் கொலை செய்து குப்பைத் தொட்டியில் வீசி சென்றது என்பது குறித்தும் போலிஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
TARGET செய்யும் தவெக அரசு? : “Mental Torture பண்ணாதீங்க..” - கண்ணீருடன் VIDEO வெளியிட்ட மாணவர் பாரதிதாசன்
-
“தி.மு.க படிக்க வைக்கும்” : மாணவர் பாரதிதாசனுக்காக குரல் கொடுத்த மு.க.ஸ்டாலின்!
-
சமூகநீதி நாளில் சமூக அநீதி : மாணவர் பாரதிதாசனுக்கு நெருக்கடி தருவது கேவலத்தின் உச்சம் - உதயநிதி ஆவேசம்!
-
லண்டன் பயணம் : செய்தியாளர்களைச் சந்திக்காமல் சென்ற முதலமைச்சர் விஜய்!
-
மும்மொழி திட்டத்தைக் கைவிட வேண்டும் : ஒன்றிய அரசுக்கு, உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது என்ன?