Tamilnadu
காணாமல் போன தங்கநகை.. மனமுடைந்து இளம் பெண் எடுத்த விபரீத முடிவு!
சென்னை ஆவடி பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன்நாதன். இவரது மகள் அனுபிரீத்தி. இவருக்கு விழுப்புரத்தைச் சேர்ந்த அருள் பிரகாசம் என்பவருடன் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இதையடுத்து இந்த தம்பதிக்கு இரண்டு ஆண்குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அனுபிரீத்தி சென்றுள்ளார்.
அப்போது அவரது கழுத்தில் அணிந்திருந்த நான்கு பவுன் தங்க நகை காணாததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்த அனுபிரீத்தி கடந்த சில நாட்களாக மன வருத்தத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில், வீட்டின் குளியலறையில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!