Tamilnadu
பொங்கல் வைப்பதில் ஏற்பட்ட தகராறு... இளைஞரை ஈட்டியால் குத்திக்கொன்ற 5 பேர் கைது - நடந்தது என்ன?
சிவகங்கை அருகே பொங்கல் வைப்பதில் எற்பட்ட தகராறில் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ளது இலந்தைகுளம் கிராமம். அங்கு பொங்கல் விழா 15ஆம் தேதி இரவு கொண்டப்பட்டது. அப்போது, அதே ஊரைச் சேர்ந்த கருப்பசாமி (28) என்ற இளைஞர் ஊரில் உள்ளவர்களுடன் சேர்ந்து பொங்கல் வைத்து விளையாட்டுப் போட்டிகள் நடத்தியுள்ளார்.
அப்போது, இலந்தைகுளம் ஊராட்சி துணைத் தலைவர் ரவி, தன்னைக் கேட்காமல் ஏன் பொங்கல் விழா நடத்துகிறீர்கள் எனக் கேட்டுள்ளார். இதில் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, ஊராட்சி துணை தலைவர் ரவியின் மகன்கள் சிவா, சிவாநாதம், ராஜ்குமார் மற்றும் ரவியின் உறவினர்கள் சேர்ந்து கருப்பசாமி மற்றும் அவரது நண்பர் அருண்குமார் ஆகியோரை தாக்கியுள்ளனர்.
இதில் விலங்குகளை தாக்கும் ஈட்டியைக் கொண்டு கருப்பசாமியை குத்தி உள்ளனர். இதில் கருப்புச்சாமி குடல் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக சிவா, சிவநாதம், ராஜ்குமார், சரத்குமார் மற்றும் கண்ணன் ஆகியோரை கைது செய்து திருப்புவனம் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
ரூ.110.92 கோடியில் துணைமின் நிலையம் : கொளத்தூரில் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.2000 கோடி முதலீடு - 3000 பேருக்கு வேலை : Hitachi நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவர்களது நோக்கம்” : சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“ஒன்றிய அரசின் மனிதத்தன்மையற்ற செயல்” : புதிய EPFO விதிகளுக்கு கனிமொழி MP எதிர்ப்பு!
-
மக்களே உஷார் : தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை - வானிலை அப்டேட் இதோ!