Tamilnadu
குடிப்போதையில் தகராறு.. கணவரை கத்தியால் குத்தி கொலை செய்த கர்ப்பிணி பெண் - விசாரணையில் ‘பகீர்’ தகவல் !
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் விளந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ். கட்டட தொழியான இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக சுரேகா என்ற என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளனர்.
இவர்களுக்கு அபிநயா என்ற பெண் குழந்தையும், வெற்றிவேல் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் இருவருக்கு சண்டை ஏற்பட்டு சுரேகா அவரது தயார் வீட்டிற்குச் சென்றுள்ளார். இதனிடையே சுரேகா 4 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
இந்நிலையில் மனைவி மீது சந்தேகம் அடைந்து கணவர் சந்தோஷ் கருவை கலைக்க கூறி வலியுறுத்தியுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி, சண்டையாகியுள்ளது. அப்போது திடீரென காய்கறி வெட்டும் கத்தியைக் கொண்டு வந்து சுரேகாவைக் கத்தியால் குத்த முயன்றுள்ளார். அப்போது சுரேகா சந்தோஷிடம் பறித்துக் கொண்டு கணவர் சந்தோஷின் கழுத்து, மார்பு, வயிறு ஆகிய பகுதிகளில் குத்தி உள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனையடுத்து சம்பவம் அறிந்து வந்தபோலிஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் போலிஸார் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!