Tamilnadu
காதலி தற்கொலை செய்துகொண்டதால் சோகத்தில் காதலனும் தூக்கிட்டு தற்கொலை : நடந்தது என்ன?
ராணிப்பேட்டை மாவட்டம், வேலம்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த கதிர்வேல் என்ற வாலிபரைக் காதலித்து வந்துள்ளார்.
இதையடுத்து, கதிர்வேல் தனது காதலியின் பெற்றோரிடம் தங்கள் மகளைத் திருமணம் செய்து தரும்படி கூறியுள்ளார். இதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மனவேதனையடைந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தற்கொலை செய்துகொண்டார்.
பின்னர், காதலியின் இறப்புச் செய்தியைக் கேட்ட கதிர்வேலும் மலையடிவாரத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் இருவரது சடலத்தையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து போலிஸார் வழக்குப்பதிவு செய்து இருவரின் பெற்றோர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். காதலை ஏற்காததால் காதலர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற வருண், வாஷிங்டன் சுந்தர்… கையில் கொடுத்த ஆச்சரியப் பரிசு: முழு விவரம்!
-
மீண்டும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைய ஓய்வறியாமல் உழைப்போம்: செல்வப்பெருந்தகை அழைப்பு!
-
‘நாம் தான் வெல்வோம்’ என்ற எண்ணத்தை எதிரிகளிடமும் ஏற்படுத்தியுள்ளோம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை (மார்ச் 17) முதல் ‘தி.மு.க வேட்பாளர்கள் நேர்காணல்’! : முழு விவரம் உள்ளே!
-
“கழக அரசு மீது களங்கம் ஏற்படுத்த நினைத்தால் அதனைப் பெண்களே ஏற்க மாட்டார்கள்!” : முரசொலி தலையங்கம்!