Tamilnadu
கிணற்றில் குளிக்கச் சென்ற 3 சிறுமிகள் பரிதாப பலி.. சோகத்தில் மூழ்கிய கிராம மக்கள்!
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த போந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி திலகவதி. இந்த தம்பதிக்கு ஹேமாவதி, கலையரசி ஆகிய இரண்டு மகள்கள் இருந்தனர். வெங்கடேசனின் உறவினர் மகள் சுபாஷினி.
இந்த மூன்று சிறுமிகளும் திலகவதியுடன் சேர்ந்து நெல் அறுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் அருகே இருந்த குட்டை கிணற்றில் மூன்று பேரும் குளிக்கச் சென்றனர். அங்கு குளித்துக் கொண்டிருந்தபோது, நீச்சல் தெரியாததால் அவர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளனர்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த திலகவதி கிராம மக்களிடம் கூறினார்.உடேன போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த போலிஸார் மூன்று சிறுமிகளையும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு, சிறுமிகளை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிணற்றில் குளிக்கச் சென்ற மூன்று சிறுமிகள் ஒரே நேரத்தில் உயிரிழந்தது அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“தி.மு.க முப்பெரும் விழா ஒத்திவைக்கப்படுகிறது!” : கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு!
-
“பேரறிஞர் அண்ணா என்றும் நம்மை வழிநடத்துவார்! வாழ்க அண்ணாவின் புகழ்!” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி!
-
திணிக்கப்பட்ட இடைத்தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுங்கள்! - முரசொலி தலையங்கம்!
-
“தமிழ்நாட்டின் அரசியல் இலக்கணத்தை எழுதிய பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ் வணக்கம்!” : மு.க.ஸ்டாலின்!
-
ஜனநாயகத்தின் குரல்வளையை தன் பூட்ஸ் காலால் நெறிக்கும் த.வெ.க அரசு : தி.மு.க ஆவேசம்!