Tamilnadu

ஊரடங்கு கட்டுப்பாடுகளை சைக்கிளில் சென்று ஆய்வு செய்த கலெக்டர்.. பொதுமக்கள் பாராட்டு!

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நேற்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இதனால், கடைகள் முழுவதும் மூடப்பட்டன. மேலும் வாகனங்கள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் புதுக்கோட்டையில் ஊரடங்குகளைப் பொதுமக்கள் முழுமையாக கடைபிடிக்கிறார்களா என்பதை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு சைக்கிளில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, சாலையில் முகக்கவஸாம் அணியாமல் நின்று கொண்டிருந்தவர்களை அழைத்து, முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வரக்கூடாது என அறிவுரை வழங்கினார். மேலும் அவர்களுக்கு முகக்கவசம் வழங்கினார்.

எந்தவிதமான பாதுகாப்பும் இன்றி தனியாக 4 கிலோ மீட்டர் தொலைவுக்கு மாவட்ட ஆட்சியர் சைக்கிளில் சென்று ஆய்வு செய்ததை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து அவருக்குப் பாராட்டு தெரிவித்தனர். மேலும் மாவட்ட ஆட்சியர் சைக்கிளில் ஆய்வு செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Also Read: “27% இடஒதுக்கீடு வழக்கில் வெற்றி.. அகில இந்தியாவுக்கே தமிழ்நாடுதான் வழிகாட்டி” : ‘முரசொலி’ புகழாரம்!