Tamilnadu
லாரி மீது மோதிய டூவீலர்.. ஒரே நேரத்தில் தந்தையும் 2 வயது மகனும் பலி - சோகத்தில் கிராம மக்கள்!
இந்நிலையில் , பையூரில் உள்ள மாமியார் வீட்டிற்குச் சென்றுவிட்டு மூன்று பேரும் இருசக்கர வாகனத்தில் வீடுதிரும்பிக் கொண்டிருந்தனர்.
பின்னர், இவர்கள் வாகனம் பையூர் பேருந்து நிலையம் அருகே வந்தபோது நிலைதடுமாறி சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மோதியது. இதில் பெரியசாமியும் அவரது இரண்டு வயது மகன் மிதுனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ரோகிணி படுகாயமடைந்தார்.
இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் இருவரது உடலையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் படுகாயமடைந்த ரோகிணியைக் கிருஷ்ணகிரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விபத்தில் தந்தையும் , மகனும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!