Tamilnadu
நோயாளியிடம் இருந்து உடல் உறுப்புகள் திருட்டு..? - தனியார் மருத்துவமனை மீது பெண் ‘பகீர்’ புகார்!
திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீனா. இவரது தாய்க்குக் கடந்த ஏப்ரல் மாதம் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்துள்ளனர்.
பின்னர் அவருக்கு மே மாதம் விரை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு நாளும் சிகிச்சைக்காக ரூ.70 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அவரை மே மாதம் கிணத்துக்கடவு அருகே உள்ள பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் இவருடன் சில நோயாளிகளும் அழைத்துச் சென்றனர்.
இதையடுத்து அடுத்த நாளிலேயே பிரவீனாவின் தாய் உயிரிழந்துள்ளார். இதையடுத்து பிரவீனாவிடம் இந்த மருத்துவமனையில் உடல் உறுப்புகள் திருடப்படுவதாகவும், இதனால் தான் உங்கள் தாய் உயிரிழந்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பிரவீனா மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டுள்ளார். இதற்கு மருத்துவமனை நிர்வாகம் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. இந்நிலையில், பிரவீனா கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
அதில், "உடல் உறுப்புகளைத் திருடும் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார். தனியார் மருத்துவமனையில் உடல் உறுப்புகள் திருடப்படுவதாகப் பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!