Tamilnadu
காதல் கணவனுடன் ஏற்பட்ட சண்டை.. விபரீத முடிவெடுத்த காதலி: நடந்தது என்ன?
கன்னியாகுமரி மாவட்டம், மறவன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் லிசா. இவர் விஷ்ணு என்ற வாலிபரைக் காதலித்து மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமணத்திற்குப் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மார்த்தாண்டம் பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர். இந்நிலையில் மனைவி லிசாவிற்கு சமைக்கத் தெரியாததால் விஷ்ணு அவரிடம் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, கடந்த 30ம் தேதி லீசா உடலில் தீ பற்றி எரிந்து கொண்டிருந்ததைப் பார்த்த அக்கம் பக்கத்து வீட்டார் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்குச் சிகிச்சை பெற்று வந்த லிசா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து கணவன் விஷ்ணுவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் நடந்து மூன்று மாதங்கள் ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணையும் நடைபெற்று வருகிறது. இளம் பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!