Tamilnadu
“நண்பர்களிடையே நடந்த மோதலில் இளைஞர் குத்திக்கொலை” : புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நிகழ்ந்த சோகம்!
வேலூர் மாவட்டம் ,பேரணாம்பட்டு அடுத்த கொத்தமாரிகுப்பம் கிராமத்தை சேர்த்தவர். விஜி குமார் , மேல் பட்டியில் ரயில்வே ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் வினோத் (22) ஓசூர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று இரவு அதே கிராமத்தை சேர்ந்த தனது நண்பர்களான ஆகாஷ் (21), அசோகன் (44) ஆகியோருடன் மாரியம்மன் கோயில் அருகில் மது அருந்திவிட்டு, ஆடல் பாடல் நிகழ்ச்சியுடன் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். இதில் ஒருவருக்கு ஒருவர் தகராறு ஏற்பட்டு தகராறு கைகலப்பாக மாறி உள்ளது.
இதனால் ஆத்திரத்தில் ஆகாஷ் மற்றும் அசோகன் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் வினோத்தை குத்தி உள்ளனர். இதில் வினோத் சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் குறித்து மேல்பட்டி போலிஸார் வழக்குபதிவு செய்து ஆகாஷ் மற்றும் அசோகன் ஆகியோரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது பதற்றம் நிலவுவதால் அப்பகுதியில் போலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Also Read
-
90% நிறைவடைந்த முதல்வர் விஜய் அறை மாற்ற வேலை : புதிய டெண்டர் விட்ட அரசு... சர்ச்சையில் பொதுப்பணித்துறை!
-
“திருவொற்றியூரில் மாணவர் கொலை.. கோமாளி சர்க்கார் மீது பயமில்லை” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
-
‘தவெக-வால் கட்டமைக்கப்பட்ட பொய்.. அமைச்சர் மரிய வில்சனால் அம்பலப்படும் விஜய்’ : முரசொலி விமர்சனம்!
-
தவெக அரசின் முதலீட்டாளர்கள் கூட்டம்.. திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் 5 கேள்விகள்!
-
‘தூய சக்தி ஆட்சியில் போதை சக்திகளின் நடமாட்டம்.. கொடூர ஆட்சிக்கு கோவையே சாட்சி’ : முரசொலி விமர்சனம்!