Tamilnadu

தொழிலதிபர் மகளைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ரூ.85 லட்சம் மோசடி.. விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்!

சென்னை, ராஜகீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்தாஸ். தொழிலதிபரான இவரது மகள் கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இது பற்றி அறிந்த சிவா என்பவர் மறுமணம் செய்து கொள்வதாக மோகன்தாஸிடம் கூறியுள்ளார்.

மேலும், தனக்குத் தெரிந்த வழக்கறிஞர் உதவியுடன் மகளின் விவாகரகத்ததை வாங்கி தருவதாகவும் உறுதியளித்துள்ளார். இதை நம்பி மோகன்தாஸ் விவாகரத்து செலவுக்காக ரூ. 85 லட்சம் கொடுத்துள்ளார். மேலும் சொகுசு கார் ஒன்றையும் சிவாவிடம் கொடுத்துள்ளார்.

இதை வாங்கிக் கொண்ட சிவா தலைமறைவாகியுள்ளார். பலமுறை அவரை தொடர்பு கொள்ள மோகன்தாஸ் முயன்றும் சிவாவைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மோகன்தாஸ் இது குறித்து சென்னை மிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர். இதில் சிவா சிபிஐயில் அதிகாரியாக இருப்பதாகக் கூறி கணவர்களைப் பிரிந்த பெண்களைக் கூறிவைத்து மறுமணம் செய்து கொள்வதாகப் பண மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் தலைமறைவாக இருந்த சிவாவைக் கைது செய்து அவரிடம் இருந்து பணம் மற்றும் கொசு காரை பிறமுதல் செய்தனர்.

Also Read: ஃப்ளூரோனாவாக மாறிய கொரோனா; ஒமைக்ரானுக்கு இடையே பரவும் புதிய வகை கோவிட் - எங்கு தெரியுமா?