Tamilnadu
மருமகளுடன் சண்டை.. தீவைத்து தற்கொலை செய்து கொண்ட மாமியார் - போலிஸ் தீவிர விசாரணை !
காஞ்சிபுரம் மாவட்டம், கொளத்தூவான்சேரி பகுதியைச் சேர்ந்தவர் கிரிஜா. இவரது மகன் ராகவேந்திரன். மருமகன் அனுஷ்யா தேவி. இந்நிலையில், மருமகளுக்கும் மாமியாருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கிரிஜா சில நாட்களாக மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வேதனையடைந்த கிரிஜா வீட்டிலிருந்து மண்ணெண்ணெய் உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.
அப்போது பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். மாமியார் மருமகள் சண்டையில், மாமியார் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!