Tamilnadu
செல்போன் பயன்படுத்தியதால் கண்டித்த பெற்றோர்.. விபரீத முடிவெடுத்த 12ஆம் வகுப்பு மாணவி!
திண்டுக்கல் மாவட்டம், காசிபாளையத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி முருகேஸ்வரி. இந்த தம்பதிக்குச் சுதா என்ற மகள் இருந்தார்.
இவர் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். சுதா அடிக்கடி வீட்டில் செல்போன் பயன்படுத்தி வந்துள்ளார். இதை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர்.
நேற்று முன்தினம் சுதா மீண்டும் செல்போன் பயன்படுத்தியுள்ளார். இதைப் பார்த்த பெற்றோர் கண்டித்து விட்டு வேலைக்குச் சென்றுவிட்டனர். பின்னர் மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த போலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து சுதாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்போன் பயன்படுத்தியதைப் பெற்றோர்கள் கண்டித்தால் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“விஜயால் முருங்கைக்காய் மட்டும்தான் பறிக்க முடியும்” : ஆர்.எஸ்.பாரதி விளாசல்!
-
“குதிரைபேரத்தில் விஜய் A1 குற்றவாளி” : தி.மு.க சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் பேட்டி!
-
நாடு சிரிக்கும் நான்கு மாதங்கள் நான்கு கேள்விகளுக்கு பதிலுண்டா? : விஜய்க்கு, தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி
-
தங்க மோதிரம் என்ன விஜய் வீட்டு பணமா? : முரசொலி தலையங்கம் அடுக்கடுக்காக கேள்வி!
-
மதுராந்தகம் தொகுதி மக்களுக்காக.. மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய செய்தி.. தவெக-வை ஓட்டால் விரட்டுங்கள்!