Tamilnadu
“10 துறைகளை உள்ளடக்கிய சிறப்புக் குழு” : பெண் சிசு கொலைகளை தடுக்க அதிரடி நடவடிக்கை எடுத்த மதுரை ஆட்சியர்!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெரிய கட்டளை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கௌசல்யா - முத்துப்பாண்டி தம்பதி. இந்த தம்பதிகளுக்கு ஏற்கனவே 4 மற்றும் 2 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த டிசம்பர் 21ம் தேதி சேடபட்டி ஆரம்பச் சுகாதார நிலையத்தில் மூன்றாவதாகப் பெண் குழந்தை பிறந்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பிறந்த இந்த பெண் குழந்தை உடல்நலக் குறைவு காரணமாக 26ஆம் தேதி காலையில் உயிரிழந்தாக யாருக்கும் தெரியப்படுத்தாமல் மறைமுகமாக வீட்டின் அருகிலேயே பெற்றோர் புதைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையடுத்து பெண் சிசுக் கொலைகளைத் தடுக்க சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமூக நலத்துறை, வருவாய், காவல்துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலகு உள்ளிட்ட 10 துறைகளை உள்ளடக்கி சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக்குழுவினர் பெண் சிசுக் கொலையைத் தடுக்கும் பணியில் ஈடுபடுவார்கள். மேலும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சிசுக் கொலைகள் தொடர்பாகச் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். குழந்தைகளைப் பராமரிக்க முடியாத பெற்றோர்கள் தொட்டில் குழந்தை திட்டத்தில் குழந்தைகளை வழங்கினால் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு உறுதி செய்யப்படும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவில்லை; முழு சங்கியாக மாறிவிட்டார் பழனிசாமி : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!
-
"மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும்" : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
”திமுக அரசினுடைய Brand Ambassodors மக்கள்தான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
”சங்கிகளின் குரலாய் ஒலிக்கும் பழனிசாமி” : ஜூலை 14 ஆம் தேதி தி.மு.க. மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
ரூ.40.86 கோடி - 2,099 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!