Tamilnadu
புத்தாண்டு கொண்டாட தடை; ஆனால்.. மக்களுக்கான DGP சைலேந்திர பாபுவின் முக்கிய அறிவுறுத்தல்கள்!
கொரோனா மற்றும் அதன் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.
அதன்படி பண்டிகை காலங்களில் நோய் பரவல் அதிகரிக்காத வண்ணம் பொதுவெளியில் மக்கள் கூடுவதையும் முற்றிலும் தவிர்க்கும்படி அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் டிசம்பர் 31ம் தேதி இரவு தமிழ்நாட்டில் உள்ள கடற்கரைகளில் பொதுமக்கள் கூடக் கூடாது என உத்தரவிட்டுள்ளார் தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு.
இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில், எவருக்கும் இடையூறு இல்லாத வகையில் மக்கள் அனைவரும் அவரவர் வீடுகளில் குடும்பத்தினருடன் புத்தாண்டை கொண்டாட வேண்டும்.
வழிபாட்டுத்தலங்களில் அரசின் கோவிட் நடத்தை வழிமுறைகளை பின்பற்றவும், புத்தாண்டு அன்று பொது இடங்களில் சாலை ஓரங்களில் கூட்டமாகவோ இரு சக்கர வாகனங்களில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும்.
புத்தாண்டு இரவின் போது மது அருந்திவிட்டு வாகனங்களில் சுற்றினால் கைது செய்யப்படுவார்கள். காவல்துறையின் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நீண்ட தொலைவு பயணிப்போர் இரு சக்கர வாகனங்களை தவிர்த்து பேருந்தோ, ரயிலிலோ பயணிக்க அறிவுறுத்தப்படுகிறது. அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். இதனால் விபத்துக்களை தவிர்க்கலாம்.
அவசரத்தேவைகளுக்காக நான்கு சக்கர வாகனத்தில் நீண்ட தூரம் இரவு நேரங்களில் பயணிப்பவர்கள் மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி தேநீர் அருந்தி, பின்னர் பயணத்தினை தொடர அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஓட்டல்கள் மற்றும் தங்கும் வசதியுடைய உணவகங்கள் தமிழக அரசு வழிகாட்டுதல் நெறிகளின்படி இரவு 11 மணி வரை செயல்படும். ஓட்டல் ஊழியர்கள் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனரா என ஓட்டல் நிர்வாகம் உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.
வெளியூர் செல்பவர்கள் பூட்டிய வீடு குறித்து தகவலை அருகிலுள்ள காவல் நிலையத்தில் தெரிவித்தால், ரோந்து காவலர்கள் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்படும். இதனால் திருட்டு சம்பவங்கள் தவிர்க்கப்படும்.
பொது இடங்களில் அமைதிக்கு குந்தம் விளைவிப்பவர்கள் ரோந்து வாகன கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுவார்கள். கன்னியமற்ற மற்றும் அநாகரீகமான செயல்களில் ஈடுபடுவோர், பைக் ரேஸ் உள்ளிட்ட ஆபத்தான செயல்பாடுகளில் ஈடுபடுகின்றவர்கள் மீது காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள்.
அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100,112 எண்களை தொடர்பு கொள்ளுமாறும், KAVALAN - SOS (காவலன் எஸ்.ஓ.எஸ்.) செயலியை பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விபத்தில்லா புத்தாண்டாக கொண்டாடியும் தமிழக காவல்துறைக்கு ஒத்துழைப்பு நல்க கேட்டுக் கொள்கிறோம். அனைவருக்கும் தமிழ்நாடு காவல்துறையின் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
Also Read
-
தமிழக ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு.. சுற்றுச்சூழல் அனுமதியை திரும்ப பெற வேண்டும் - வைகோ வலியுறுத்தல்!
-
‘பெரியார் விருது’ பெறும் கனிமொழி எம்.பி! : தி.மு.கழக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு!
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!