Tamilnadu
சொகுசு வாழ்க்கைக்கு ஆசை.. திட்டம்போட்டு தாய்மாமா வீட்டிலேயே கைவரிசை காட்டிய மைத்துனர் : சிக்கியது எப்படி?
காஞ்சிபுரம், மாருதிநகர் பகுதியைச் சேர்ந்தவர் மேகநாதன். இவர் ஆடிட்டராக வேலைபார்த்து வருகிறார். இவரின் இரண்டு சகோதரர்களுக்கும் திருமணமாகி ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 23ம் தேதி மேகநாதன் வீட்டில் இல்லாதபோது முகமூடி அணிந்த நான்குபேர் கொண்ட கும்பல் வீட்டிற்குள் புகுந்து, 44 சவரன் நகைகள், ஒரு கிலோ வெள்ளி, ஒரு லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து போலிஸார் அப்பகுதியிலிருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதில் மேகநாதனின் மைத்துனரே நண்பர்களைக் கொண்டு வீட்டில் கொள்ளையடித்தது தெரியவந்தது.
இதையடுத்து போலிஸார் சந்தானகிருஷ்ணன், அவரது நண்பர்கள் கௌதம், சிவக்குமார் ஆகிய மூன்று பேரை போலிஸார் கைது செய்தனர். மேலும் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு பணம் திருடியதும் விசாரணையில் தெரிந்தது. பின்னர் இவர்களிடமிருந்த 44 சவரன் நகை, பணம் மற்றும் வெள்ளி பொருட்களை போலிஸார் பறிமுதல் செய்தனர்.
Also Read
-
திரும்பத் திரும்ப... "வயிற்றெரிச்சலால் அறிக்கை விட்டிருக்கிறார் பழனிசாமி" - அமைச்சர் TRB ராஜா விமர்சனம் !
-
பப்ஜி முதல் பாரம்பரிய விளையாட்டுகள் வரை.. சென்னையில் கேமிங் திருவிழா... குவிந்த இளைஞர்கள் !
-
வடகிழக்குப் பருவமழை - மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் அறிவுறுத்தல்!
-
”இந்தியாவின் ஏற்றுமதி துறைகளைப் பாதுகாக்க புதிய கொள்கையை வடிவமைக்க வேண்டும்” : TN CM Stalin வலியுறுத்தல்!
-
ஆன்லைன் பண மோசடி : பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை என்ன?