Tamilnadu
சீரியலில் மூழ்கிய பெண்கள்; நைசாக சென்று நகைகள் அபேஸ்: ஆடிட்டர் வீட்டில் ஆட்டையப்போட்டவர்களுக்கு வலைவீச்சு
காஞ்சிபுரம் மாவட்டம் கோனேரிக்குப்பம் பக்குதியில் உள்ள மாருதி நகர் சங்கரன் தெருவில் வசித்து வருபவர் மேகநாதன். பட்டையக் கணக்காளரான இவரது வீட்டில்தான் கொள்ளையர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.
இந்நிலையில் பணி நிமித்தமாக மேகநாதன் வெளியூர் சென்றிருக்கிறார். அப்போது வீட்டில் அவரது மனைவியும் உறவுக்கார பெண்ணும் சேர்ந்து மதியம் சுவாரஸ்யமாக டிவியில் சீரியல் பார்த்திருக்கிறார்கள். மேலும் வாயில் கதவையும் முறையாக பூட்டாமல் இருந்திருக்கிறார்கள்.
அப்போது சமயம் பார்த்து நைசாக உள்ளே வந்த இருவரும் சீரியலில் மூழ்கிய பெண்களை கட்டிப்போட்டு பீரோவில் இருந்த 19 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை கொள்ளையடித்துச் சென்றிருக்கின்றனர்.
இதனையத்து வெளியே காவலுக்கு இருந்த இருவருடன் கொள்ளையர்கள் தப்பிச் சென்றிருக்கிறார். பின்னர் கொள்ளை நடந்த வீட்டுக்கு விரைந்த புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட எஸ்.ஐ. ஜூலியஸ் சீசர், தாலுகா காவல் ஆய்வாளரும் ராஜகோபால் உள்ளிட்ட போலிஸார் விசாரணையில் ஈடுபட்டனர்.
மேலும் அப்பகுதியில் சிசிடிவி கேமிராக்கள் எதுவும் பொருத்தப்படாததால் கொள்ளையர்களை பிடிப்பதில் போலிஸாருக்கு சவாலாக உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க அப்பகுதிகளில் ரோந்து பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
Also Read
-
“தேசிய சராசரியை விட 3 மடங்கு அதிக வளர்ச்சியடைந்த தமிழ்நாடு!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!
-
10.1 கி.மீ நீளம் - 10 நிமிட பயணம்! : ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலக புத்தொழில் மாநாடு - 2025 : கோவையில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”எங்களுக்கு தமிழ் இலக்கண வகுப்பு எடுக்காதீர்கள்” : பழனிசாமிக்கு பதிலடி தந்த அமைச்சர் எ.வ.வேலு!
-
முதலமைச்சர் கோப்பை : ‘பூப்பந்து விளையாட்டு’ போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.30 லட்சம் பரிசுத்தொகை!