Tamilnadu
ஆசைக்கு இணங்காத மாடல் அழகிக்கு மிரட்டல்; மார்ஃபிங் போட்டோ அனுப்பியவர் எப்படி சிக்கினார்? போலிஸ் அதிரடி!
சென்னை , கொளத்தூர் பகுதியில் வசிக்கும் 21 வயதான இளம்பெண் மாடலிங் துறையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு Event Manager ஆக இருக்கக் கூடிய ரஞ்சித் என்பவர் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி சினிமா கதை கூறி நட்புறவை ஏற்படுத்தியிருக்கிறார்.
இதையடுத்து ரஞ்சித் அடிக்கடி அந்த பெண்ணை தொடர்பு கொண்டு சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி தொந்தரவு செய்து வந்துள்ளார். ரஞ்சித்தின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த இளம்பெண் அவரின் தொடர்பை துண்டித்துள்ளார். இந்நிலையில் ரஞ்சித் தனது பெயரை தீஷ்குப்தா என பெண் பெயரில் மாற்றி வேறொரு செல்போன் எண் மூலம் மாடலிங் பெண்ணிடம் வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்டிருக்கிறார்.
அப்போது தானும் மாடலிங் துறையில் இருப்பதாகவும், உங்களது மாடலிங் புகைப்படங்களை அனுப்பும்படி கேட்டிருக்கிறார். இதனை நம்பிய அந்த பெண் தனது மாடலிங் புகைப்படங்களை அனுப்பி வைத்துள்ளார்.
ரஞ்சித் அந்தப் பெண்ணின் மாடலிங் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து மீண்டும் அவருக்கே அனுப்பியதோடு அந்தப் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடாமல் இருக்க தனது ஆசைக்கு இணங்க வேண்டும் என கூறி மிரட்டி வந்துள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் தனது தந்தையிடம் இது குறித்து குறியுள்ளார். உடனே பெண்ணின் தந்தை கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தன் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.
அண்ணா நகர் காவல் மாவட்ட சைபர் கிரைம் காவல் குழுவினரின் உதவியுடன் கொளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அதில், வழக்கில் சம்பந்தப்பட்ட திருப்பூரைச் சேர்ந்த ரஞ்சித் (26) என்பவரை நேற்று (26.12.2021) கைது செய்தனர். அவரிடமிருந்து 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் விசாரணையில் குற்றவாளி ரஞ்சித் சென்னை பெரும்பாக்கம் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி Event Manager தொழில் செய்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட ரஞ்சித் நேற்று (26.12.2021) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
Also Read
-
சென்னையில் COOP-A-THON மினி மாரத்தான் போட்டி.. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர்கள் !
-
“மனித குலத்துக்கே செய்கின்ற ஒரு மாபெரும் தொண்டு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!
-
தினமலரின் பொய் செய்தி! - அங்கன்வாடி மையங்கள் குறித்து விளக்கிய தமிழ்நாடு அரசு!
-
சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் மாபெரும் சாதனைகள்... பட்டியலை வெளியிட்டு தமிழ்நாடு அரசு பெருமிதம்!
-
இந்தி திணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !